இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் விபத்து- இருவர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதை விபத்து
சுரங்கப்பாதை விபத்து
Published on

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் உள்ள டிடாங் நீர்மின் திட்ட நிலையத்தில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இன்று காலை நிலையத்தின் சுரங்கப்பாதையின் உள்ளே செல்லும் தள்ளுவண்டி நழுவி 45 முதல் 50 டிகிரி சாய்வில் பாதையில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, 50-வது பட்டாலியனின் இந்தோ- திபெதட்திய எல்லைக் காவல்துறை மற்றும் நிறுவன பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட பணியாளர்களில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டை சேர்ந்த நீர்மின் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com