உ.பியில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: 8 பேர் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய கார்
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷிவ்நகரில் உள்ள மஹூவாரா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றுவிட்டு 11 பேர் காரில் மஹ்லா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜோகியா உதய்பூர் பகுதியில் உள்ள  கத்யா கிராமம் அருகே அதிகாலை 1 மணியளவில் கார் எதிரே சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இறந்தவர்கள் சச்சின் பால் (16), முகேஷ் பால் (35), லாலராம் பாஸ்வான் (26), ஷிவ் சாகர் (18), ரவி பாஸ்வான் (19), பிந்து குப்தா (25), ராம் பரன் (35), மற்றும் ஓட்டுநர் கவுரவ் மவுரியா (22) என அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கிடையே, சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com