search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் ரத்து
    X

    ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் ரத்து

    • புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி செல்ல இருந்தார்.
    • மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று ஆய்வு செய்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். நேற்று முதல் 15-ந்தேதி வரை புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆசிய நாடுகளுக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று ஆய்வு செய்தார். இன்று ராஜஸ்தான், மிசோரம் தேர்தல் குறித்து ஆய்வு செய்கிறார்.

    Next Story
    ×