டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா நடைபெறுகிறது.மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.
டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Published on

பழங்குடியினரின் கலாச்சாரத்தை பெரிய அளவில் மதிப்பளிக்கும் வகையில், 'ஆதி மஹோத்சவ்' என்ற மெகா தேசிய பழங்குடி விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இதன்படி, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com