இந்தியர்களை மீட்கும் பணி- உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரைகிறார்கள் மத்திய மந்திரிகள்

உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் தலைமையிலான கூட்டம்
பிரதமர் தலைமையிலான கூட்டம்
Published on

புதுடெல்லி:

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை நடைபெற்றது. இதில், மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிலையில், உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் செல்ல உள்ளனர். 

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவுக்கும், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும், மத்திய இணை மந்திரி வி.கே.சிங் போலந்துக்கும் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com