பஞ்சாபில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

பஞ்சாபில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரது அலுவலகங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போக்குவரத்துத் துறை இயக்குனராக பதவி வகித்து வருபவர் பரம்ஜித்சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரிடம் போக்குவரத்து அதிகாரி ஒருவர் பொது மேலாளர் பதவி உயர்வுக்காக சிபாரிசு செய்யும்படி கூறினார்.

இதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என பரம்ஜித்சிங் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு தொகை தர முடியாது என அவர் தெரிவித்தார்.

பின்னர் ரூ.2 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனாலும் ரூ.5 லட்சம் வேண்டும் என பரம்ஜித்சிங் கேட்டார். இந்த பணத்தை கொடுக்க விரும்பாத அந்த அதிகாரி, சி.பி.ஐ.யிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து பரம்ஜித் சிங்கை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். சம்பவத்தன்று பரம்ஜித்சிங், புகார் கொடுத்தவரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

சண்டிகர், மொகாலியில் உள்ள பரம்ஜித்சிங்கின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com