கோவா சட்டமன்ற தேர்தல்: பிரியங்கா காந்தி நாளை பிரசாரம் தொடங்குகிறார்

உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புது வியூகங்களை வகுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கோவா மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com