search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் செயற்குழு 19-ந்தேதி கூடுகிறது: தேர்தல் அறிக்கைக்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படுகிறது
    X

    காங்கிரஸ் செயற்குழு 19-ந்தேதி கூடுகிறது: தேர்தல் அறிக்கைக்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படுகிறது

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
    • காங்கிரஸ் கட்சியின் கடைசி செயற்குழு கூட்டம் டிசம்பர் 21-ந்தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும் என்று 2 மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த செயற்குழுவில் இறுதி வடிவம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, 30 லட்சம் பொதுத்துறை வேலைகளை நிரப்புதல், 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கப்படுவது போன்ற வாக்குறுதிகளை அந்த கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதிகள் இடம்பெறும்.

    காங்கிரஸ் கட்சியின் கடைசி செயற்குழு கூட்டம் டிசம்பர் 21-ந்தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×