சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண படம் எடுத்து மிரட்டல்... கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த பெற்றோர், அவளிடம் விசாரித்தனர்.பிரச்சிதன், சுஞ்சனா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூதாடி பகுதியை சேர்ந்தவர் பிரச்சிதன் (வயது45). இவரது மனைவி சுஞ்சனா (38). இவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறுமி கடந்த 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியை பிரச்சிதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது மனைவி சுஞ்சனாவின் சம்மதத்துடன் அவர் சிறுமியை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதனை அவர்கள் வீடியோவும் எடுத்திருக்கின்றனர்.

சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த பெற்றோர், அவளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அதுபற்றி பிரச்சிதனிடம் சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

அப்போது அவர், இதுபற்றி வெளியில் கூறினால் தன்னிடம் உள்ள சிறுமியின் நிர்வாண படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், அது பற்றி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிரச்சிதன், இந்த விவகாரத்தில் அவரது மனைவி சுஞ்சனா மட்டுமின்றி சுரேஷ் (59) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதையடுத்து பிரச்சிதன், சுஞ்சனா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷ், கல்பெட்டா போக்சோ கோர்ட்டில் கடந்த வாரம் சரண் அடைந்தார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் பிரச்சிதன், சுஞ்சனா ஆகியோர் கெனிச்சிரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் நிர்வாண படங்கள் எதுவும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com