தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு

த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில், பல முக்கிய புள்ளிகளுக்கு அழைப்பு
தமிழக முதலமைச்சராக விஜய்  பதவி ஏற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு
Published on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகத்திற்கு, காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு, த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியிலிருந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமானத்தின் மூலம் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.

இதனை தொடர்ந்து பல முக்கிய ஆளுமைகளும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com