சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள் இன்று..

"எனக்கு நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தியாவை வல்லரசு நாடக மாற்றிக் காட்டுகிறேன்" என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்
Published on

"வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 123-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1893-ஆம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய உரை இந்திய கலாச்சாரத்தின் புகழை உலகிற்குப் பறைசாற்றியது.

ஆன்மிகம் மட்டுமின்றி, ஏழைகளுக்குக் கல்வி மற்றும் சமூக சேவை ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கருதியவர் சுவாமி விவேகானந்தர். அவரின் போதனைகள் இன்றளவும் இளைஞர்களுக்கு எழுச்சியையும் உத்வேகத்தையும் தருகிறது. "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை ஓயாதிருமின்” போன்ற பல கருத்துகளை இவ்வுலக மக்களுக்கு வழங்கினார் விவேகானந்த்ர்.

அஞ்சா நெஞ்சமும், பக்தியும், தெளிவும் கொண்டு பலருக்கும் பல உன்னத வாழ்வியல் கருத்துகளை பறைசாற்றியவர்.

இளைஞர்கள் வருங்காலத்தின் திறவுகோல் என்றும் "முதலில் உங்கள் மீது நம்பிக்கையை வையுங்கள், பிறகு கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்" என்று வலியுறுத்தியவர்.

அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாமும் மரியாதை செலுத்துவோம்!

சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுவாமி விவேகானந்தருக்கு என் கோடிக்கணக்கான வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். இந்தியக் கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் தேசிய உணர்வுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த அவரது பங்களிப்பு இணையற்றது. அவரது அறிவுத்திறனும் எழுச்சியூட்டும் சிந்தனைகளும் இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் உறுதியை நனவாக்குவதில், அவரது ஆன்மிகச் செய்திகள் தேசத்திற்குப் புதிய ஆற்றலையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து வழங்கும் என்று தெவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com