

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்று எதிர்க்கட்சி இருக்கையில் அமர உள்ளது.
நேற்று அமித் ஷா தலைமையில் நடந்த வெற்றி வேட்பாளர்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக பவானிப்பூர் மற்றும் நந்திகிராமில் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இவரே மேற்கு வங்க முதல்வராகிறார்.
இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் விழாவில் சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தேர்தலின் நடுநிலை தன்மை குறித்து சந்தேகம் தெரிவித்து மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை கலைத்தது குறிப்பிடத்தக்கது.