கவர்னரின் செயல் சட்டப்படி தவறானது- உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
கவர்னரின் செயல் சட்டப்படி தவறானது- உச்ச நீதிமன்றம்
Published on

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், உடனே இம்மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வாசித்து வருகிறது. அதில், அரசியல் சாசன பிரிவு 200-ன் படி கவர்னரின் முடிவெடுக்கும் அதிகாரம் குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். மசோதாக்களை நிறுத்தி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் சட்டப்படி தவறானது. 

X

Maalai Malar
www.maalaimalar.com