

கடந்த 1988-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, அன்று முதல் வெங்கிட சுப்ரமணி மோகனா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து கடந்த 2015-இல் அவரை மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ஆயுதப்படைகளில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையம், மூத்த குடிமக்களின் சொத்துரிமைகள் மற்றும் கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அவர் ஆஜராகி வாதாடியுள்ளார்.
இந்த நிலையில் 59 வயதான நீதிபதி மோகனா இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2018-இல் நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்கு பிறகு, வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்ற நாட்டின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து 2021 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி பி.வி.நாகரத்னாவுடன், உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராக நீதிபதி மோகனாவும் இருப்பார்.