மீண்டும் ஆட்சிக்கு வரும் சமாஜ்வாதியின் கனவு 2047-லும் நிறைவேறாது: உ.பி. துணை முதல் மந்திரி

கேசவ் பிரசத் மவுர்யா, பிரிஜேஷ் பதக் என இரு துணை முதல் மந்திரிகள் பதவி வகித்து வருகின்றனர்.
மீண்டும் ஆட்சிக்கு வரும் சமாஜ்வாதியின் கனவு 2047-லும் நிறைவேறாது: உ.பி. துணை முதல் மந்திரி
Published on

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கேசவ் பிரசத் மவுர்யா, பிரிஜேஷ் பதக் என இரு துணை முதல் மந்திரிகள் பதவி வகித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில், இரு முக்காலிகள் சேர்ந்து ஒரு நாற்காலியை உருவாக்காது என்ற வாசகத்துடன், இரு துணை முதல் மந்திரிகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

இதையடுத்து பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் அகிலேஷுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய உத்தர பிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, சமாஜ்வாதி குடும்பத்தின் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவு 2047-ம் ஆண்டு வரையிலும் கூட நிறைவேறாது என கடுமையாக சாடினார்.

பா.ஜ.க. தலைமைக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கும் இடையிலான வார்த்தைப் போர் சமூக ஊடகங்களில் மூன்றாவது நாளாக தொடர்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com