

இந்தியாவின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட் இந்த மாத இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அமைந்துள்ள இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஏவுதளத்தில், விக்ரம்-1 ஏவுகனையானது சோதனைப் பறப்பு முதல் தளத்தில் இருந்து ‘ஆகமன் திட்டத்தை’ செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஏவுதல் காலம் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 4 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதைச் சாத்தியமாக்கிய இஸ்ரோ மற்றும் இன்ஸ்பேஸ்க்கு நன்றி.
இந்தியாவைப் பொறுத்தவரை, தனியாரால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு சுற்றுவட்ட ராக்கெட் இந்த ஏவுதளத்தில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.
விக்ரம்-1 பகுதி பகுதியாக உயிர் பெறுகிறது, அதன் ஒவ்வொரு நிலையும் கவனமாக உயர்த்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒரே பயணத்திற்குத் தயாரான ராக்கெட்டாக ஒருங்கிணைக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகமன் திட்டத்திற்காக 1.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 60 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியதாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.