

மம்தா கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. சோபந்தேப் சத்தோபாத்யாய் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய அந்த கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் கையெழுத்திட வேண்டும். இது சட்டசபையில் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது கையெழுத்திடுவார்கள். அப்படி இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கையெழுத்துகள் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய போடப்பட்ட கையெழுத்துடன் வேறுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. தலைவரும், முதல்வருமான சுவேந்து அதிகாரி இது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த நிலயைில் அந்த இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் யார் என்பதை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மம்தா பானர்ஜி இருவரையும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு மம்தா கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இதற்கிடையே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் மம்தா மீது விமர்சனம் வைத்துள்ளனர்.