என் மலர்tooltip icon

    இந்தியா

    எரிபொருளுக்கு தனி கட்டணம்.. ரூ.2,300 வரை வசூலிக்க இண்டிகோ முடிவு | IndiGo
    X

    எரிபொருளுக்கு தனி கட்டணம்.. ரூ.2,300 வரை வசூலிக்க இண்டிகோ முடிவு | IndiGo

    • ஏர் இந்தியா ஏற்கனவே டிக்கெட் விலைகளில் கூடுதல் கட்டணம் விதிக்கிறது.
    • இந்த கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

    மத்திய கிழக்கு போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    விமான எரிபொருளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. விமானக் கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் புதிய கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. ஏர் இந்தியா ஏற்கனவே டிக்கெட் விலைகளில் கூடுதல் கட்டணம் விதிக்கிறது.

    இந்நிலையில் இண்டிகோவும் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளது.

    எரிபொருள் கூடுதல் கட்டணம் என்ற பெயரில் இண்டிகோ ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 425 முதல் ரூ. 2,300 வரை வசூலிக்க உள்ளது. இந்த கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

    இண்டிகோ உள்நாட்டு பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 425, மத்திய கிழக்கு விமானங்களுக்கு ரூ. 900, தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் மேற்கு ஆசிய விமானங்களுக்கு ரூ. 1,800 மற்றும் ஐரோப்பா விமானங்களுக்கு ரூ. 2,300 எரிபொருள் கட்டணம் வசூலிக்கும்.

    சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இண்டிகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×