செந்தில் பாலாஜி வழக்கு- அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
செந்தில் பாலாஜி வழக்கு- அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பியதோடு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.

செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை இன்று இறுதி வழக்காக மீண்டும் விசாரிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com