

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 1695.40 புள்ளிகளும், நிஃப்டி 461.30 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிளைவடைந்தது.
ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்ததாக டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இதன் காரணமாக உலகளாவிய சந்தைகள் எழுச்சியுடன் இந்திய பங்குச் சந்தையும் ஏற்றத்தை கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,775.47 உயர்ந்து வர்த்தகமானது. இது 2.40 சதவீதம் உயர்வாகும். இறுதியில் 1,695.40 உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 2.30 சதவீதம் ஆகும்.
இந்திய பங்குச்சந்தை குறியீடு எண் நிஃப்டி வர்த்கத்தில் 483.75 புள்ளிகள் அல்லது 2 சதவீதம் அதிகரித்து வர்த்தகம் ஆனது. இறுதியில் 1.99 சதவீதம் அல்லது 461.30 புள்ளிகள் உயர்ந்தது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.98 சதவீதம் குறைந்தது. பஜாஜ் பைனான்ஸ், லார்சன் அண்டு டூர்போ, இன்டர்குளோம் அவியேசன், டைட்டன், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்தை கண்டன.