

உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டிற்காக ஒரு புரட்சியை வழிநடத்துபவர் கிளர்ச்சியாளர் என அழைக்கப்படுகிறார்.
பகத் சிங் ஒரு கிளர்ச்சியாளர். வீர சாவர்க்கர் ஒரு கிளர்ச்சியாளர். ராஜகுரு, சுக்தேவ், மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகிய அனைவரும் கிளர்ச்சியாளர்களே. அவர்கள் துரோகிகள் அல்ல.
இந்த மக்கள் (ராஜினாமா செய்த எம்.பி.க்கள்) தங்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். என்ன மாதிரியான கிளர்ச்சியாளர்கள்? வெறும் 50 கோடி ரூபாய்க்காக ஒருவர் கிளர்ச்சியாளராக மாறிவிடுவாரா?
நாம் ஒரு 'ஹராம்கோரை' 'ஹராம்கோர்' என்று அழைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக அவரை அரிச்சந்திரா என்று அழைக்க வேண்டுமா?
நீ ஒரு துரோகி. நீ கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தாய், அதனால் நீ துரோகி என்று அழைக்கப்படுவாய். இதில் இழிவானது என்ன இருக்கிறது?
துரோகி என்பது ஒரு இழிவான வார்த்தையா? அப்படியென்றால், அதை அகராதியிலிருந்து நீக்கிவிடுங்கள் என காட்டமாக தெரிவித்தார்.