search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.2,000 நோட்டு மாற்றும் விவகாரம்: அவசரமாக விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு
    X

    ரூ.2,000 நோட்டு மாற்றும் விவகாரம்: அவசரமாக விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

    • கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை.
    • அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.

    புதுடெல்லி :

    2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை மே 23-ந் தேதி முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி ஐகோா்ட்டு, ''இந்த அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையான போக்கும் இல்லை. மேலும், கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது'' என்று கூறி, ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.

    இத்தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 1-ந் தேதி, மனுவை அவசரமாக விசாரிக்க கோரி நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகி முறையிட்டார்.

    முறையீட்டை நிராகரித்த நீதிபதிகள், இதுபோன்ற மேல்முறையீட்டு மனுவை விடுமுறை கால அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் நேற்று மீண்டும் முறையிட்டார்.

    முறையீட்டை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதில் அவசரம் எதுவும் இல்லை. கோடை விடுமுறைக்கு பின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் ஜூலை 3-ந்தேதி முறையிடுமாறு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×