27 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் 10 மாநிலங்கள் உள்ளடக்கிய 27 மாநிலங்களவை தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
27 seats nomination for Rajya sabha begins today
Published on

மாநிலங்களவையின் 27 இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மற்றும் மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களை உள்ளடக்கிய 24 இடங்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 8 பிற்பகல் 3 மணி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களின் பரிசீலினை ஜூன் 9 அன்று தேர்தல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 11 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com