சுத்தமான நீரைக் குடித்துவிட்டு பொய்யான அறிக்கை தருகிறார்: கெஜ்ரிவாலை சாடிய ராகுல் காந்தி

அரவிந்த் கெஜ்ரிவால் தூய்மையான அரசியலை கொண்டு வருவேன் என்று கூறினார்.டெல்லியில் கோடிக்கணக்கான ரூபாய் மதுபான ஊழல் ஆம் ஆத்மி கட்சியினரால் செய்யப்பட்டது.
சுத்தமான நீரைக் குடித்துவிட்டு பொய்யான அறிக்கை தருகிறார்: கெஜ்ரிவாலை சாடிய ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பவனா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவால் தூய்மையான அரசியலை கொண்டு வருவேன் என்று கூறினார். ஆனால், டெல்லியில் நடந்த மிகப்பெரிய ஊழல், கோடிக்கணக்கான ரூபாய் மதுபான ஊழல் அவரது கட்சியினரால் செய்யப்பட்டது. அவர் கார்ப்பரேட் அரசை நடத்துகிறார்.

ஐந்து ஆண்டுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் யமுனை நதியில் குளித்துவிட்டு யமுனை நதி நீரை குடிப்பேன் என்றார். 5 ஆண்டு ஆகிவிட்டது. இன்றுவரை கெஜ்ரிவால்ஜி யமுனை நீரைக் குடிக்கவில்லை. நீங்கள் அழுக்குத் தண்ணீரைக் குடிக்கவேண்டும்,

சுத்தமான தண்ணீரைக் குடித்துவிட்டு பொய்யான அறிக்கைகளை உங்களுக்குத் தருகிறார் என காட்டமாக விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com