ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Modi
Published on

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் ராகுல் காந்தி, இன்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி ஜி அவர்களுக்கு அவரது பிறந்தநாளில் எனது நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com