நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்: பஞ்சாப் முதல் மந்திரி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.
நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்: பஞ்சாப் முதல் மந்திரி
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு மையத்திற்குச் செல்வதற்கான பயணக் கட்டணத்திற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. சற்று முன் கெஜ்ரிவால்ஜி அவர்களுடன் பேசியபோது, ​​அந்தக் குழந்தைகள் உதவி கோரினர்.

நீட் தேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. எனவே, ஜூன் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நீட் தேர்வு எழுதச் செல்லும் அனைத்துக் மாணவர்களுக்கும் பஞ்சாப் சாலைப் போக்குவரத்துப் பேருந்துகளில் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

உங்கள் அனுமதி அட்டையைக் காட்டினால் பயணச்சீட்டிற்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com