என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் போராட்டம் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு வீட்டுக்காவல்
- நாங்கள் என்ன தீவிரவாதிகளா சமூக விரோதிகளா எங்களை பார்த்து ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்.
- எங்களை தடுத்து நிறுத்தும் முயற்சி உங்கள் இயலாமையை காட்டுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி இன்று தலைமைச் செயலகம் முற்றிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்ததால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒஎஸ் ஷர்மிளாவின் மகன் திருமணம் நேற்று பெங்களூருவில் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் பெங்களூரில் இருந்து விமான மூலம் ஷர்மிளா கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்பி ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின் தொடர்ந்து வந்தனர்.
இதனால் உஷாரான ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தக்கூட உரிமை இல்லையா. இங்கு போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். இந்த சூழ்நிலை எனக்கு அவமானமாக இல்லையா.
நாங்கள் என்ன தீவிரவாதிகளா சமூக விரோதிகளா எங்களை பார்த்து ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்.
எங்களை தடுத்து நிறுத்தும் முயற்சி உங்கள் இயலாமையை காட்டுகிறது என்றார்.