என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் அடம் பிடித்த ஆர்சிபி.. வெளியான அதிர்ச்சி தகவல்
    X

    போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் அடம் பிடித்த ஆர்சிபி.. வெளியான அதிர்ச்சி தகவல்

    • சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிந்தனர்.
    • 11 பேரின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு மற்றும் ஆர்சிபி நிர்வாகம் உதவி தொகை அறிவித்துள்ளது.

    18-வது ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

    இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் காவல்துறை எச்சரிக்கை செய்தும் ஆர்சிபி அணி அடம்பிடித்த இந்த நிகழ்ச்சியை வைத்தது காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி பெங்களூரு காவல்துறையினர் தரப்பில் இருந்து ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு கூறியதாவது, இந்த விழாவை இன்று நடத்த வேண்டாம். ஞாயிற்று கிழமையில் நடத்துமாறும், கூட்ட நெரிசலை சமாளிக்கா முடியாது எனவும் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்த ஆர்சிபி, வெளிநாட்டு வீரர்கள் பலர் இருப்பதால் இன்றே வைத்தால் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என அடம் பிடித்து இந்த நிகழ்ச்சியை நடத்துமாறு தெரிவித்துள்ளனர் என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால்தான் நேற்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆர்சிபி அணியின் இந்த முடிவால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×