பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி :

லடாக்கின் பங்கோங்கில் இந்திய எல்லைக்கு அருகே சீனா 2-வது பாலம் கட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகின.

இதைத்தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பங்கோங்கில் சீனா முதல் பாலம் கட்டியபோது, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என இந்திய அரசு கூறியது.

தற்போது 2-வது பாலம் கட்டும்போதும் நிலைமையை கவனித்து வருவதாக கூறியுள்ளது' என குற்றம் சாட்டி இருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல . ஒரு அச்சுறுத்தும் மற்றும் அடக்கமான பதிலடி பலிக்காது. பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com