அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.
PM Modi
Published on

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். மூன்றாவது முறை இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மேலும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதுதவிர பிரதமர் மோடி முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com