திரிணாமுல் காங்கிரசின் குண்டர்களே, இதோ கடைசி வாய்ப்பு..! கர்ஜித்த பிரதமர் மோடி

ஊடுருவல்காரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டத்தையும் மீறி, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திரிணாமுல் காங்கிரஸ், பெண்களுக்கு அதிகாரமளித்தலை எதிர்க்கிறது என்றார் பிரதமர் மோடி.
திரிணாமுல் காங்கிரசின் குண்டர்களே, இதோ கடைசி வாய்ப்பு..! கர்ஜித்த பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் 4 பொதுக்கூட்டங்களில் கலந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

முதலாவதாக பாங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

* குடியரசுத் தலைவர் தேர்தலின்போது திரவுபதி முர்முவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசும், பழங்குடியினருக்கு எதிரான காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

* குர்மி சமூகத்தின் குறைகளை திரிணாமுல் காங்கிரஸ் செவி கொடுத்து கேட்பதில்லை. ஆனால் அதன் வாக்கு வங்கிக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது

* 2029-ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவதை தடுக்க காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் சதி செய்தது. பெண்களால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

* நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய, அதிகமான பெண்கள் அரசியலில் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்

* பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் உறுதிபாட்டிற்கு மறுபெயர் பாஜக

* திரிணாமுல் காங்கிரசின் (கொடுமையான அரசு) மீதான மக்களின் கோபத்தை தற்போதைய உற்றசாகம் பிரதிபலிக்கிறது.

* ஊடுருவல்காரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டத்தையும் மீறி, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திரிணாமுல் காங்கிரஸ், பெண்களுக்கு அதிகாரமளித்தலை எதிர்க்கிறது.

* தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் காவல்துறையிடம் சரணடைய கடைசி வாய்ப்பை கொடுக்கிறேன். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாரும் தப்பிக்க முடியாது.

* இந்த ஆண்டு வங்காள தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். மக்கள் திரிணாமுல் காங்கிரசின் 'பயத்தை' முடிவுக்குக் கொண்டு வந்து, பாஜக-வின் நம்பிக்கைக்கு ஆணை வழங்குவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com