இமாம் உசேனின் தியாகத்தை போற்றுவோம் - பிரதமர் மோடி மொஹரம் வாழ்த்து

மொஹரம் உட்பட 4 மாதங்கள் இஸ்லாமிய மரபில் போருக்கு செல்ல தடை செய்யப்பட்ட மாதங்கள் ஆகும்.
இமாம் உசேனின் தியாகத்தை போற்றுவோம் - பிரதமர் மோடி மொஹரம் வாழ்த்து
Published on

மொஹரம் பண்டிகை தினமான இன்று பிரதமர் மோடி ஹஸ்ரத் இமாம் உசேனின் தியாகத்தை போற்றியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், "ஹஸ்ரத் இமாம் உசேனின் தியாகம் காலங்கள் கடந்தும் உலகெங்கிலும் உள்ள மக்கள் உண்மையையும் நீதியையும் கடைபிடிக்க உந்துசக்தியாக அமைந்த்துள்ளது.

அவரின் தியாகம் தைரியத்தின் சக்தியையும் உறுதிப்பட்டையும் நினைவுவூட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

மொஹரம்

கர்பாலா போரில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேனின் உயிர்தியாகத்தை நிறைவுகூறும் வகையில் உலகம் முழுவதிலும் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

இஸ்லாமிய நாள்காட்டியின் முதல் மாதம் மொஹரம் ஆகும். மொஹரம் மாத தொடக்கம் புத்தாண்டை குறிக்கிறது. இது இஸ்லாத்தில் மிகவும் புனிதனான மாதங்களில் ஒன்று.

மொஹரம் உட்பட 4 மாதங்கள் இஸ்லாமிய மரபில் போருக்கு செல்ல தடை செய்யப்பட்ட மாதங்கள் ஆகும். இந்த புனித மாதத்தின்போது கடவுளை வணங்குதல், பிரார்த்தனை உள்ளிட்டவற்றிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என்பது மரபு.

மொஹரம் மாத தொடக்கத்தின் முதல் 10 நாட்கள் இமாம் உசேன் மற்றும் அவருடன் உயிர் தியாம் செய்தோரின் தியாகத்தை நினைவிகூறும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஷியா முஸ்லிம்களிடையே மொஹரம் பண்டிகை அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது .

X

Maalai Malar
www.maalaimalar.com