ஹங்கேரி தேர்தலில் வெற்றி பெற்ற பீட்டர் மாக்யாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உங்களின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு பீட்டர் மாக்யார் மற்றும் திஸ்ஸா கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி தேர்தலில் வெற்றி பெற்ற பீட்டர் மாக்யாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பீட்டர் மாக்யார் தலைமையிலான திஸ்ஸா கட்சி வெற்றி பெற்றது. இதனால் அவர் விரைவில் ஹங்கேரி நாட்டின் பிரதமராக உள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் விக்டர் ஆர்பனை தோற்கடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமாக இருக்கும் பீட்டர் மாக்யாருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி "உங்களின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு பீட்டர் மாக்யார் மற்றும் திஸ்ஸா கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் நல்வாழ்வுக்காக மிக முக்கியமான இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லவும், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விக்டர் ஆர்பன் உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார். இதனால் இந்த தேர்தல் வெற்றிக்கு ஐரோப்பிய நாடுகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com