இஸ்ரோ ஏவிய 100-வது ராக்கெட்: பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.100வது ராக்கெட்டை ஏவிய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ ஏவிய 100-வது ராக்கெட்: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி.எப்-15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது. என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வரலாற்று சிறப்புமிக்க 100வது ஏவுதலுக்காக இஸ்ரோ-க்கு வாழ்த்துகள்! இந்த நம்பமுடியாத மைல்கல் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொலைநோக்கு, மற்றும் அர்ப்பணிப்பை விளக்குகிறது. தனியார் துறை கைகோர்ப்பதன் மூலம், இந்தியாவின் விண்வெளி பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com