தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி

தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி
Published on

திருவனந்தபுரம்:

தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்து தீவிர களப்பணியாற்றியும் வருகிறது.

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடியும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார். 

இந்த நிலையில் அவர் மீண்டும் கேரளா வர இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி விரைவில் கேரளா வர இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ் நாத்சிங் உள்ளிட்டோரும் பிரசாரத்திற்காக கேரளா வர உள்ளதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com