பெட்ரோல், டீசல் விலை உயருமா? - மத்திய அரசு விளக்கம்

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான்.
பெட்ரோல், டீசல் விலை உயருமா? - மத்திய அரசு விளக்கம்
Published on

"பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து சில செய்தி அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவை குறித்து தெளிவாகச் சொல்லப்படுவது என்னவென்றால், அத்தகைய எந்த முன்மொழிவும் அர சின் பரிசீலனையில் இல்லை." என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று முடிவடைந்த பின்னர், எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று தனியார் வங்கியாள கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலர் அளவில் நீடித்தால், லிட்ட ருக்கு ரூ.28 வரை விலை உயர்வு ஏற்படலாம் என கணிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய செய்திகள் மக்களிடையே அச்சமும் பதற்றமும் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் "கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான். சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பின் தாக்கத்தில் இருந்து இந்திய மக்களை பாதுகாக்க அரசு மற்றும் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன." என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியதும், அதற்கு ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்ததும், உலகின் முக்கியமான எரி சக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கை இந்த நீரிணை கையா ளுகிறது.

இதன் விளைவாக. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை உயர்ந்தது. தற்போது மீண்டும் அதிகரித்த பதற்றத்தால், உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 106 டாலர் அளவில் நிலவுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. தலைநகரில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 ஆகவும், டீசல் விலை ரூ.87.67 ஆகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com