நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக உயர்வு!

கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக உயர்வு!
Published on

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை உயர்த்தப்படுவது இது நான்காவது முறையாகும்.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ,ரூ.2.46 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.107.77 ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.2.57 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளன.

இந்த தொடர் விலை உயர்வு நாடு முழுவதும் பணவீக்கம், போக்குவரத்து மற்றும் தினசரி பயணச் செலவுகள் ஆகியவற்றில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com