சீட்-க்கு அடியில வெடிகுண்டு இருக்கு - பயணி அலறலால் விமான நிலையத்தில் பரபரப்பு

இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார். விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கோப்புப்படம் 
கோப்புப்படம் 

கோப்புப்படம் 

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com