search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கோஷ்டி பூசல்: காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு- டெல்லியில் 2-ந் தேதி ஆலோசனை
    X

    கர்நாடகாவில் கோஷ்டி பூசல்: காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு- டெல்லியில் 2-ந் தேதி ஆலோசனை

    • 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.
    • கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில் ஆட்சி அமைத்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கர்நாடக காங்கிரசில் மோதல் நடைபெற்று மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் இடையே பிரச்சினைகள் வெடித்து இருக்கின்றன.

    அதாவது அமைச்சர்கள் தங்களிடம் எதுவும் ஆலோசிக்காமல் சுயமாக முடிவு எடுப்பதாகவும், சில மந்திரிகளை அணுகவே முடிய வில்லை என்றும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.

    ஊழல் குற்றச்சாட்டு உட்கட்சி பூசல் ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

    ஆகஸ்ட் 2-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், ராகுல்காந்தி தலைமையில் என 2 கூட்டம் நடக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.

    அரசாங்கத்துக்கும், கட்சிக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கவும், அதிருப்தியை சமாளிப்பதற்காகவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ.க்களை அணுகுவதால் மாற்றம் வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

    Next Story
    ×