சொந்தமாக வீடு, நிலம், வாகனம் எதுவும் இல்லை - மம்தா பானர்ஜி சொத்து விவரம்

ராயல்டி மற்றும் வங்கி வட்டி ஆகியவை தனது முதன்மை வருமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக வீடு, நிலம், வாகனம் எதுவும் இல்லை - மம்தா பானர்ஜி சொத்து விவரம்
Published on

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனக்குச் சொந்தமாக வீடோ நிலமோ வாகனமோ இல்லை என்று தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் அவர், அண்மையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

அதில், அவர் குறிப்பிட்ட  தனது சொத்து விவரங்களில்,  தனக்குச் சொந்தமாக வீடோ, விவசாய நிலமோ, காலி நிலமோ அல்லது எந்தவொரு குடியிருப்பு சொத்துமோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். தனக்கு சொந்தமாக வாகனம் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கையில் ரூ. 75,700 ரொக்கமாகவும், இரண்டு வங்கிக் கணக்குகளில் சேமிப்புத் தொகையும் வைத்துள்ளார்.  ஒன்று தனிப்பட்ட வங்கிக் கணக்கு, மற்றொன்று தேர்தல் செலவுகளுக்காக எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆகும். தனிப்பட்ட கணக்கில் ரூ. 12,36,209 இருப்பதாகவும், இரண்டாவது கணக்கில் ரூ. 40,000 மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 15.37 லட்சம் என அவர் தெரிவித்துள்ளார். இதில் வங்கி வைப்புத்தொகை, ரொக்கம் மற்றும் தங்க நகைகள் அடங்கும். 

தன்னிடம் 9.75 கிராம் தங்கம் இருப்பதாகவும், அதன் தற்போதைய சந்தை மதிப்பின்படி ரூ. 1.75 லட்சம் மதிப்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2025-26 ஆம் ஆண்டில் தனக்கு ரூ. 40,600 TDS பணமாகத் திரும்பக் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். ராயல்டி மற்றும் வங்கி வட்டி ஆகியவை தனது முதன்மை வருமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com