அவர்களுடைய ஒரு பகுதியாக கருதவில்லை: குமாரசாமி

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லைபா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அழைக்கவில்லை
அவர்களுடைய ஒரு பகுதியாக கருதவில்லை: குமாரசாமி
Published on

காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலம் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில் ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com