ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் முதல் முறையாக பொதுவெளியில் வெளியீடு

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் முதல் முறையாக பொதுவெளியில் வெளியீடு
Published on

22 ஏப்ரல் 2025 இல் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஒரு குதிரை ஓட்டி உயிரிழந்தார்.

இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டிய இந்தியா, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7, 2025 அன்று திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது ஆபரேஷன் சிந்தூர் என அழைக்கப்படுகிறது. இதில் பல முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா பின்னர் தெரிவித்தது.

இதற்கு பதில் தாக்குதலாக பாகிஸ்தானும் டிரோன் உள்ளிட்டவை மூலம் எல்லை பகுதியை தாக்கின. இரு நாடுகள் இடையிலான மோதல் 2 நாட்கள் கழித்து மே 9 அன்று மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் 6 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர்கள் முதல் முறையாக தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் சுவர்களில் 3டி முறையில் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேசிய போர் நினைவாக இணையதளத்திலும் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெயர்கள்

10வது காலாட்படை படைப்பிரிவு தலைமையகத்தை சேர்ந்த சுபேதார் மேஜர் பவன் குமார்,

ஜம்மு காஷ்மீர் 4வது பட்டாலியன் லைட் இன்பேன்ட்ரி-யை சேர்ந்த வீர் சக்ரா பதக்கம் பெற்ற ரைபிள்மேன் சுனில் குமார்,

5வது பீல்டு ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார்,

851 லைட் ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த ஏவியேஷன் டெக்னீஷியன் மூத் முரளிநாயக்,

237 பீல்டு ஒர்க்ஷாப் கம்பெனியை சேர்ந்த ஹவில்தார் சுனில் குமார் சிங்,

இந்திய விமானப்படை 39 விங்-ஐ சேர்ந்த வாயு பதக்கம் பெற்ற சார்ஜன்ட் சுரேந்திர குமார்,

ஆகிய 6 பேரே ஆபரேஷன் சிந்தூரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com