ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மீது 9 குண்டுகளை வீசினோம் - ஓராண்டு நிறைவையொட்டி இந்திய ராணுவம் தகவல்

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மீது 9 குண்டுகளை வீசினோம் - ஓராண்டு நிறைவையொட்டி 
இந்திய ராணுவம் தகவல்
Published on

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய முப்படைகளால், கடந்த மே மாதம் 7ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், “இது வெறும் ஆரம்பம்தான், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை தொடரும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத அமைப்புகளை, குண்டு வீசி துல்லியமாக முப்படைகள் தகர்த்தனர். இதில், ஏழு குண்டுகள் இந்திய ராணுவத்தாலும் இரண்டு குண்டுகள் இந்திய விமானப்படையாலும் வீசி தாக்கப்பட்டன”.

இதன்மூலம் பாகிஸ்தானில் எந்த பகுதியில் மறைந்திருந்தாலும், அதை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள், இந்தியாவிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக, லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com