கடும் வெயில் - திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது

திருப்பதி கோவிலில் நேற்று 69,270 பேர் தரிசனம் செய்தனர்.
கடும் வெயில் - திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது
Published on

ஆந்திர மாநிலத்தில் கோடைகால வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. சித்தூர்,திருப்பதி மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதும் திருப்பதி கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

திருப்பதியில் நிலவும் அதிகபட்ச வெயில் காரணமாக கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் தற்போது 70 ஆயிரத்துக்கு குறைவான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி கோவிலில் நேற்று 69,270 பேர் தரிசனம் செய்தனர். 33, 180 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com