விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது அரசியலமைப்புக்கு விரோதமானது- உத்தவ் சிவசேனா

தமிழக தேர்தல் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது.
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது அரசியலமைப்புக்கு விரோதமானது- உத்தவ் சிவசேனா
Published on

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக தேர்தல் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க கவர்னர் ராஜேந்திர அர்லேகர் அழைக்கவில்லை.

கவர்னரின் இந்த நிலைப்பாடு முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com