AI Models | ஏ.ஐ. மாடல்களால் அச்சுறுத்தல்... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை

தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது இக்கூட்டத்தின் நோக்கம்.
AI Models | ஏ.ஐ. மாடல்களால் அச்சுறுத்தல்... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை
Published on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடன் இணைந்து, நேற்று (வியாழக்கிழமை) வணிக வங்கிகள் மற்றும் முக்கியப் பங்குதாரர்களுடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களின் தாக்கத்தை மதிப்பிடவும், மென்பொருள் பாதுகாப்பு குறைபாடுகளை ஆயுதமாக்குவதற்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும் இக்கூட்டத்தின் நோக்கம் ஆகும்.

அனைத்து வங்கிகளும் தங்களது தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை பாதுகாக்கவும், வாடிக்கையாளர் தரவுகளை பேணவும், நிதி ஆதாரங்களை பாதுகாக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

கூட்டத்தின் போது, ​​இணைய பாதுகாப்பு அமைப்புகளையும் நெறிமுறைகளையும் வலுப்படுத்துவதில் வங்கிகள் இதுவரை ஆற்றியுள்ள பணிகளை மத்திய நிதியமைச்சர் பாராட்டினார் என நிதி அமைச்சகம் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரியில் இருந்து உருவாகும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் முழுவதும் மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு, தயார்நிலை மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com