நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்- டெல்லி முதல்வர்

மறுதேர்வு வருகிற ஜூன் 21-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்- டெல்லி முதல்வர்
Published on

கடந்த மாதம் மே 3-ந் தேதி நடைபெற்ற நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில், தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) உத்தரவிட்டது. இதையடுத்து மறுதேர்வு வருகிற ஜூன் 21-ந் தேதி நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, ஜூன் 21-ந் தேதியன்று நடைபெற உள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில் இலவச பயண வசதி வழங்கப்படும் என்று டெல்லி அமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜூன் 21 அன்று நடைபெறும் இளநிலை நீட்-2026 தேர்வில் பங்கேற் கும் மாணவர்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து அனைத்து அரசு பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்யலாம். மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com