

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது.
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மே 3 நடைபெற்ற தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.
இதைதொடர்ந்து இன்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் நுழைவுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நீட் தேர்வு முறைகேடுகள் இனி நடக்காது.
தேசிய தேர்வு முகமையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.