திருமணமான 7 நாட்களில் உயிர்நீத்த கடற்படை அதிகாரி - மனைவி மனமுடைந்து அஞ்சலி - மனதை உலுக்கும் வீடியோ

விமான நிலையத்தில் கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்மை பெருமைப்படுத்தினார்.
திருமணமான 7 நாட்களில் உயிர்நீத்த கடற்படை அதிகாரி - மனைவி மனமுடைந்து அஞ்சலி -  மனதை உலுக்கும் வீடியோ
Published on

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.

இந்நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாக்குதலில் கொல்லப்பட்ட தனது கணவருக்கு மனைவி கனத்த மனதுடன் அழுதபடி பிரியாவிடை அளித்த மனதை உருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

"அவரது ஆன்மா சாந்தியடைய நம்புகிறேன். அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்மை பெருமைப்படுத்தினார். இந்த பெருமையை நாம் எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும்," என்று அவர் நடுக்கும் குரலில் தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com