ம.பி படகு விபத்து: மேலும் ஒருவர் சடலமாக மீட்பு- பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு

மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ம.பி படகு விபத்து: மேலும் ஒருவர் சடலமாக மீட்பு- பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு
Published on

மத்தியபிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் சுற்றுலா படகில் 31 பேர் சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அணை நீரில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல்போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 12வது உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஜபல்பூர் அருகே பர்கி அணைப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com